முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      தமிழகம்
jallikattu

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

பொங்கல் மற்றும் தமிழர் திருவிழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை செயலர் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இடம்பெற்றுள்ளவை பின்வருமாறு., மாவட்ட ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது. விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.

விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடர்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த போட்டிகளில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் அதுதொடர்பான விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்துவது முக்கியம்.போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.

ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.தேவையற்ற குழப்பங்கள், தவறுகளைத் தவிர்க்கவும், ஒழுங்குமுறையுடன் போட்டிகளை நடத்தவும், விதிகளை சரிபார்க்கும் பட்டியலின்படி (செக் லிஸ்ட்) செயல்படுதல் வேண்டும். போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருத்தல் அவசியம்.

தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவர்கள் வழங்க வேண்டும். அதேபோன்று, போட்டி களத்துக்குள் பார்வையாளர்களும், வெளி நபர்களும், வீரர்கள் அல்லாத பிறரும் இருக்க அனுமதியில்லை. அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து