Idhayam Matrimony

45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      இந்தியா
Mamta 2024-12-07

கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இந்த 5 மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 58 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், ராஜஸ்தானில் 44 லட்சம் பேரும், கோவாவில் 1.01 லட்சம் பேரும், புதுச்சேரியில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. மேற்கு வங்காளத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை முன்பு 7.66 கோடியாக இருந்தது. தற்போது 7.08 கோடியாக குறைந்துள்ளது. அங்கு 58 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. இது சில முக்கிய தொகுதிகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் தொகுதியான பவானிபூரில் 47,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அந்த தொகுதியில் 2,06,295 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வரைவு பட்டியலில் 1,61,509 வாக்காளர் பெயர்கள் மட்டுமே உள்ளன. 21.7 சதவீத வாக்காளர்கள் அங்கு நீக்கப்பட்டுள்ளனர்.அந்த தொகுதியில் கொல்கத்தா மாநகராட்சியின் 8 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 3 வார்டுகளில் அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மம்தா பானர்ஜி தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால், நீக்கப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் அந்த இடங்களுக்கு சென்று பெயர்களை சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அந்த கட்சி உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து