முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேசின்பிரிட்ஜ்-அரக்கோணம் வழித்தடத்தில் நவீன எச்சரிக்கை கருவி தெற்கு ரெயில்வே அறிக்கை

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சென்னை

பயணிகள் பாதுகாப்பு கருதி சென்னை பேசின்பிரிட்ஜ்-அரக்கோணம் இடையேயான வழித்தடத்தில் ரெயில் பாதுகாப்பு மற்றும் நவீன எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில்கள் மற்றும் ரெயில் வழித்தடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து தகவல் தொடர்பு மற்றும் சிக்னல் பிரிவுகளில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், தேல்ஸ் இந்தியா திட்டத்தின் மூலம் ஐரோப்பாவில் நிறுவப்பட்டுள்ள மேம்பட்ட சிக்னலிங் கருவிகளை இந்திய ரெயில்வேயில் பொருத்த இந்திய ரெயில்வே முடிவு செய்து இதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் தேல்ஸ் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியது. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள ரெயில் பாதைகளில் (இடிசிஎஸ்) நிலை-1 என்ற நவீன ரெயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை கருவி பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. கருவியானது ரெயில், தண்டவாளம், லெவல் கிராசிங், சிக்னல் ஆகியவைகளை ஒருங்கிணைத்து செயல்படும். இந்த கருவி சென்னை கடற்கரை - சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையேயான வழித்தடத்தில் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.எச்சரிக்கை கருவிஇந்த நிலையில் சென்னை பேசின்பிரிட்ஜ்-அரக்கோணம் இடையேயான 68 கிலோ மீட்டர் வழித்தடத்தில் இயக்கப்படும் 82 மின்சார ரெயில்களில் இந்த நவீன கருவி பொருத்தப்பட்டு, ரெயில்வே வாரியத் தலைமை இயக்குனர் அகில் அகர்வாவால் நேற்று சென்னை அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் வைத்து தொடங்கி வைக்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் ரெயில்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு, தண்டவாளத்தின் இடையே மனிதர்களோ, வாகனங்களோ கடந்து சென்றால் ரெயில் என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி எச்சரிக்கை விடுக்கும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். இதனால் பயணிகள் நலன் விரிவடைவதும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கும். இதேபோல் தானி ரெயில் பாதுகாப்பு (ஏடிபி) திறன் மூலம் தடத்திறனும் மேம்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்