புயலால் பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களில் விரைவாக நிவாரணப்பணிகள் மேற்கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு கிராம மக்கள் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்
P neri

வர்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.குறிப்பாக பொன்னேரி வட்டம்,பழவேற்காடு சுற்றுலா மற்றும் மீனவப்பகுதிகளில் பெருத்த சேதத்தை வர்தா புயல் ஏற்படுத்தியது.திருவள்ளுர் மாவட்டத்தில் வர்த்தா புயல் நிவராணப் பணிகளுக்கென 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டன.இதில் பழவேற்காடு 1 முகாமிற்க்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,பழவேற்காடு 2 முகாமிற்க்கு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் நியமிக்கப்பட்டனர்.வேரோடு மரங்கள் வீட்டின் மீது சாய்ந்தது,மீனவ கட்டுமரங்கள்,பைபர் போட்டுகள் காற்று மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் தூக்கி வீசப்பட்டது.மீன்பிடி உபகரணங்கள் அடித்து செல்லப்பட்டது.2000க்கும் மேற்ப்பட்ட கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தரைமட்டமாகின.புயல் காற்றுடன் கடல் அலைகள் சீற்றத்தால் கரைபுரண்ட உப்பு நீரினால் நிலத்தடி நீர் உப்பானது.மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். புயல் எச்சரிக்கை காரணமாக முன்கூட்டியே முகாம்களில் பொது மக்கள் தங்க வைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இப்படி சின்னபின்னமான கடற்கரை கிராமங்கள் மீண்டும் சீரமைக்க ஒரு மாத காலம் ஆகும் என கணிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு மேற்கொண்ட பெரும் முயற்சியால் 12 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி முடிய 10 நாட்களில் உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துதல்,சாலை பணிகள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று முடிந்தன.முகாம்களில் தங்கிருந்த மக்கள் பத்திரமாக வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.நேற்று லைட்ஹவுஸ் கடற்கரை கிராமங்களான கூனங்குப்பம்,திருமலைநகர்,எஸ்.பி,குப்பம்,அரங்கம்குப்பம்,வைரவன்குப்பம்,நக்கத்துரவு ஆகிய கிராமங்களுக்கும்,தாங்கல் பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட கோரைக்குப்பம் கிராமத்திற்க்கும் நிறைவுப்பெற்ற பணிகளை பார்வையிட மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்றார். அப்போது அந்த கிராம மக்கள் விரைவாக நிவாரணப்பணிகளை மேற்கொண்டமைக்காக அமைச்சருக்கு நன்றியையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.பின் கிராம மக்களோடு அமைச்சர் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.இந்த நிகழ்ச்சியில் பூபாஷா உள்ளிட்ட கிராம நிர்வாகிகள்,வருவாய்துறை அதிகாரிகள்,பொன்னேரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள்,மின் ஊழியர்கள்,கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: