முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2025      விளையாட்டு
New-Zealand--2025-12-22

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

575 ரன் குவிப்பு....

நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

420 ரன்களுக்கு...

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்தது.

138 ரன்களில் அவுட்...

கடைசி நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. மிகவும் பொறுமையுடன் விளையாடிய இந்த தொடக்க ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். பிரெண்டன் கிங் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஜான் கேம்பல் 105 பந்துகளை சந்தித்து 16 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 87 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

ஜேக்கப் புதிய சாதனை

 

இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி தட்டி சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேக்கப் டஃபி (81 விக்கெட்டுகள்) படைத்துள்ளார். இதற்கு முன்பு சர் ரிச்சர்ட் ஜான் ஹட்லி 1985-ம் ஆண்டில் 79 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரது நீண்டகால சாதனையை ஜேக்கப் முறியடித்துள்ளார். இதன் மூலம் 48 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து