முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2025      தமிழகம்
EPS 2020 11-16

சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடியில் எம்.எல்.ஏ. திட்ட நிதியில் முடிக்கப்பட்ட பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் எடப்பாடியில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அப்போது அவர் பேசுகையில், மக்கள் விரோத அரசை அகற்ற விருப்பம் உள்ளவர்கள் எங்களோடு இணைந்து கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5,000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, நூறு நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என தெரிவித்தது.

ஆனால் செய்தார்களா?. இன்று மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள்களாக உயர்த்திருக்கிறது. அதனைப் பாராட்ட தி.மு.க. அரசுக்கு மனமில்லை. கல்விக் கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டர் மானியம் என தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் என்னவானது?. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க. அரசு. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தி.மு.க. அரசு திட்டமிட்டே ஏமாற்றுகிறது. எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்குப் பின் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டதாக தவறான தகவல் கூறுகின்றனர்.

போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்களைத்தான் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள், போலி வாக்காளர்களை வைத்து தி.மு.க. இவ்வளவு நாள்களாக வெற்றி பெற்று வந்தது. இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். உண்மையான வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். எஸ்.ஐ.ஆர். நடைமுறை எல்லா கட்சிக்கும் பொதுவானது, அதில் என்ன குறைபாடு உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து