அனுபோக சான்று பெற 29ல் சிறப்பு முகாம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      நீலகிரி

 

அனுபோக சன்று பெற நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் 29_ந் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_

29_ந் தேதி

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக நில அனுபோக சான்று பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அனுபோக சான்று வழங்கும் சிறப்பு முகாம் நாளை(29_ந் தேதி) நடத்தப்பட உள்ளது.

 

அனுபோக சான்று

 

எனவே அன்றைய தினத்தில் அந்தந்த வட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் நில அனுபோக சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தினை தங்களின் அனுபோகத்தினை உறுதி செய்யும் அனைத்து ஆவணங்களுடன் நேரிடையாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கும்பட்சத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே வட்டாட்சியரால் அனுபோக சான்று வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: