கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலராமணியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தை கல்லால் அடித்து கொலை

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      ஈரோடு

 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலராமணியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் ஜெகநாதனை தந்தை மாரியப்பன் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலராமணியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டல் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவரது திருமணமாகாத இளையமகன் ஜெகநாதன் என்பவர் இறைச்சிக்கடைக்கு வேலை சென்றுகொண்டும் பகுதி நேரமாக இருசக்கர வாகனப்பழுது நீக்கும் தொழிலும் செய்துவருகிறார். இவர் மதுபோதைக்கு அடியாகியுள்ளதால் தினமும் மது அருந்திவந்து தனது தந்தை மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் இன்று அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு தனது தந்தையை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்க முற்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தந்தை மாரியப்பன் அவரது தாக்குதலைத் தடுக்க அருகில் இருந்த கல்லை எடுத்து திருப்பி தாக்கியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராது விதமாக மாரியப்பன் தாக்கிய கல் ஜெகநாதனின் தலையில் பட்டு பெருங்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெகநாதன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஜெகநாதன் உயிரிழந்து தெரிந்து கோபி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல்பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தையே மகனை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் கலராமணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: