முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாக அறிவிப்பது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      நீலகிரி
Image Unavailable

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாக அறிவிக்கவேண்டும் என்பதற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் சஜெயந்தி தலைமையில் நேற்று (29.12.2016) நடைபெற்றது.
கழிப்பறை
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 ல் தமிழகத்தில் சிறப்பான சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியான தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை முற்றிலும் ஒழித்து அனைவரும் கழிப்பறைக் கட்டி பயன்படுத்த தனிநபர் இல்ல கழிப்பறைத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கழிப்பறைக் கட்ட ரூ.12 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தினை 2016-17 ம் ஆண்டில், துய்மை பாரக இயக்கம் (கிராமம்) திட்டத்தின்கீழ் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக உருவாக்கிடும் நோக்கத்தில் கழிப்பிடங்கள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ், திருப்பூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்க 135 ஊராட்சிகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அக்டோபர் 2016 முடிய 87 ஊராட்சிகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட அறிவிக்கப்பட்டது.
கூட்டம்
அதனை முழுமையான பயன்பாட்டிற்கு உறுதிப்பாட்டிற்கு உறுதிப்படுத்தவும் நிலுவையாக உள்ள 48 ஊராட்சிகளை நடவடிக்கை மேற்கொண்டு 100மூ திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவித்தல் என்ற அடிப்படையில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை ஆகிய துறைகளை ஊரக வளர்ச்சித் துறையோடு ஒருங்கிணைந்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் அனைத்து அலுவலர்களையும் இத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்று 100மூ 28.02.2017க்குள் 135 ஊராட்சிகளும் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவித்து பயன்பாட்டினை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் குருநாதன், செயற்பொறியாளர் (ஊ.வ.) செந்தில்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்