முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பாளர் பட்டியலில் ஆதரவாளர்கள் இல்லை, கட்சி தலைவரிடம் உ.பி.முதல்வர் அதிருப்தி

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

லக்னோ  - வேட்பாளர் பட்டியலில் தற்போது பதவியில் இருக்கும் ஆதரவாளர் எம்.எல்.ஏக்கள்  50க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பதால் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்  தனது அதிருப்தியை ஆளும் சமாஜ் வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கிடம்  தெரிவித்தார்.  உத்தரப்பிரதேசத்தில் வரவிருக்கும் புத்தாண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்காக ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தனது ஆதரவாளர்கள் அதிகம் இடம் பெறாத வேதனையில்  மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைவரும், தனது தந்தையுமான முலாயம் சிங்கிடம் அதிருப்தியை தெரிவித்தார்.

உத்தரப்பிரசேதத்தில் முதல்வராக உள்ள அகிலேஷ் யாதவுக்கும்  அவரது சித்தப்பாவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் தம்பியுமான  சிவ்பால் யாதவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில் சிவ்பால் யாதவ் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரித்த போது,  முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ஆதரவாளர்கள்  அதிக அளவில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அறிவித்ததுடன் அது தொடர்பான வேட்பாளர் பட்டியலையும் கட்சியிடம் அளித்தார்.

இந்த இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதால்  சமாஜ் வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் தனது வேதனையை வெளிப்படையாக வெளிப்படுத்தியுடன் , கருத்து வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் இருங்கள் என்றும் அறிவுறுத்தினார்.இருப்பினும் அகிலேஷ் , சிவ்பால் யாதவ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. இதற்கிடையே நேற்று முலாயம் சிங் அதிரடியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளில்  325 தொதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை  அறிவித்தார். மேலும் அந்த பட்டியலில் அவர் தனது மகனும் , முதல்வருமான அகிலேஷ் யாதவ் யாதவை வரவிருக்கும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. இதனால் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி அடைந்து தனது அதிருப்திய கட்சி தலைமையிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் நேற்று தனது ஆதரவாளர்களை தனது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை செய்தார். பின்னர் அவர் தனது தந்தையை சந்தித்தார்.கட்சி வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் சிங்கும், சிவ்பால் யாதவும்  வெளியிட்டனர். அவர்கள் அகிலேஷ் யாதவ் இல்லாத சூழலில் இந்த வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர் . அதில் தற்போது பதவியில் இருக்கும் 176 எம்.ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  அகிலேஷ் யாதவிற்கு ஆதரவான பல அமைச்சர்கள் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இல்லை. இது அகிலேஷ் யாதவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது எம்.எல்.ஏவாக உள்ள 50க்கும் மேற்பட்ட சமாஜ் வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்