மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      ஈரோடு

காளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன்பாளையம் சாலையில் உள்ளது மாரியம்மன் கோவில். இங்கு கடந்த 20ல், பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்றிரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள், உலக நன்மை மற்றும் குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, அம்மனை வழிபட்டு, விளக்கு பூஜை செய்தனர். ஜன 4ல், பொங்கல் வைபவம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: