காஞ்சி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகை நமக்கு பகை விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanch9 1

காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டியிலுள்ள அரசினர் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் காஞ்சி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகை நமக்கு பகை விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வட்டார சுகாதார மருத்துவர் உமாதேவி தலைமைத் தாங்கினார், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். புகையிலை கட்டுப்பாட்டு மைய உளவியலாளர் சிவசண்முகம், சமுகவியலாளர் சோழவேந்தன் ஆகியோர் கலந்துக்கொண்டு புகையிலையில் நிகோட்டின் மட்டும் அல்லாது 4000 த்துக்கும் மேற்பட்ட கெடுதலான ரசாயனங்கள் உள்ளன. இவை நுரையீரல் உட்பட உடலில் பல்வேறு பாகங்களில் புற்றுநோய் மட்டும் அல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும், மேலும் நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன எனவே இத்தகைய பாதிப்புகள் வராமல் இருக்க புகையிலையை முற்றிலும் தவிர்கப்பட வேண்டும் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், சத்தியராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: