அஞ்சல்துறை மூலம் 2017 காலண்டர் வெளியீடு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      நீலகிரி

அஞ்சல் துறையின் தமிழக வட்டம் 2017 ம் ஆண்டிற்கான அழகிய தபால்தலை காலண்டரினை வெளியிட்டுள்ளது. இக்காலண்டர்கள் வரும் 5_ந் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தபால்தலை கண்காட்சியினை பிரபலப்படுத்தும் வகையில் இந்த காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

                                     காலண்டர்

இக்காலண்டர் விற்பனையை மேற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் சாரதா சம்பத் தொடங்கி வைத்து பேசுகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமான அழகிய வண்ண படங்களுடன் இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அரிய வகை தபால் தலைகளும் இந்த காலண்டரில் இடம்பெற்றுள்ளது. தபால் தலை சேகரிப்பவர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த 2017ம் ஆண்டிற்கான அழகிய தபால்தலை காலண்டர்கள் கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்கள், சிறப்பு தபால்தலை சேகரிப்பு மையம் மற்றும் அனைத்து போஸ்ட் ஷாப்பிகளிலும் விற்பனை செய்யப்படும். இதன் விலை ரூ.100 என்றார். இத்தகவலை நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: