நேஷனல் பொறியியல் கல்லூரியில் சிகரம் தொடு நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜனவரி 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி

கோவில்பட்டி கே.ஆர். நகர் நேஷனல் பொறியியல் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவர்களுக்கான  கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான சிகரம் தொடு நிகழ்ச்சியின்  துவக்க விழர் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர்   கே. என். கே. எஸ். கே. சொக்கலிங்கம  தலைமை  வகித்தார். கல்லூரி முதல்வர்  எஸ். சண்முகவேல் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சரவணப்பெருமாள் அவையோரை வரவேற்றுப் பேசினார். முதல்வர்  எஸ். சண்முகவேல் வாழ்த்துரை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி உரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  இராமகிருட்டிணன்இ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தம் சிறப்புரையில் சிகரம் என்பது ஒவ்வொருவருடைய பார்வை, தேவை, முயற்சி  போன்றவைகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்தில் நீங்கள் எதைத் தேரிந்தெடுக்கப்போகிறீர்கள்? பெற்றோரும் ஆசிரியர்களும் உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். மாணவர்களின் கனவு நனவாக வேண்டுமானால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியைவிட மாணவர்கள் அதிகமாக முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள்  வேலைகளை மற்றவர்கள் சொல்லும்முன் தாமாகவே செய்துவிட வேண்டும்.

தேர்வு நெருங்கும் இந்தக் காலத்தில் உணவும் தூக்கமும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே படித்த பாடங்கள் மனதில் தங்கும். நாம் நன்றாக படித்திருக்கிறோம். நம்மால் தெளிவாக எழுத முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு வேண்டும். மேலும் மாணவர்கள் உயர்ந்த சிந்தனையோடு உயர்ந்த நிலைக்குச் செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கல்விப் பணிக்காக கே.ஆர். கல்விக்குழுமம் சிறந்த பணியாற்றி வருகிறது என்று பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  லெனினஇ நன்றியுரை வழங்கினாh.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர்  கே.என்.கே.எஸ்.கே. சொக்கலிங்கம் மற்றும் கல்லூரி முதல்வர்  எஸ். சண்முகவேல் ஆகியோரது வழிகாட்டுதலின் பெயரில் துறைத்தலைவர்   எம். ஏ. நீலகண்டன்இ  ஒருங்கிணைப்பாளர்கள் சரவணப்பெருமாள்   லெனினஇ முருகன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: