10 அணு குண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு வடகொரியா புளூட்டோனியம் உள்ளது

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      உலகம்
north korea missile(N)

சியோல்  - வடகொரியாவிடம், 10 அணு குண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு புளுட்டோனியம் இருப்பதாக தென் கொரியா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனை
பன்னாட்டு தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதுவரை 5 முறை அணு ஆயுத சோதனைகளையும், பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உள்ள வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் தனது நடவடிக்கைகளை வடகொரியா கைவிடுவதில்ல்லை.

தென்கொரியா தகவல்
இந்த நிலையில், வடகொரியாவிடம் 10 அணு குண்டுகள் தயாரிக்க கூடிய அளவுக்கு புளூட்டோனிய இருப்பதாக தென்கொரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்கொரியாவின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் இது பற்றி கூறும் போது, “வடகொரியாவிடம் 2016-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் 10 கிலோ அளவுக்கு புளூட்டோனியம் இருந்தது.


10 அணு ஆயுதங்கள் ....
இதை வைத்து 10 அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். 8 ஆண்டுகளுக்கு முன்பு 40  கிலோ அளவுக்கு வைத்திருந்தது. இதேபோல் மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து ஆயுதங்கள் தயாரிக்கும் திறனை வட கொரியா பெற்றிருக்கிறது. ஆனால், ஆயுத தயாரிப்பு யுரேனியம் எவ்வளவு இருப்பு உள்ளது என்பது தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: