தோட்டக்கலைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை பயன் படுத்தி கொள்ளவேண்டும் : மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தகவல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், நேற்று (13.01.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது.

 

மலைப்பயிற்கள்

 

தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் புதுக்கோட்டை வட்டாரம், தொண்டைமான்விடுதியில் அர்ச்சுணன் என்பவரது தோட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 0.50 எக்டர் பரப்பளவில் ரூ.8000 மானிய தொகையில்; நிலப்போர்வை மூலம் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகளையும், காய்கறி வளர்பதற்கு 0.25 எக்டர் பரப்பளவில் ரூ.50000 மானிய தொகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பந்தல் அமைத்தல் பணியையும், பண்ணைக் குறைபாடு நிவர்த்தி செய்யும் திட்டத்தின் கீழ் 11 விவசாயிகளுக்கு மானிய தொகையில் தலா ரூ.2000 என மொத்தம் ரூ.22000 மதிப்பில் காய்கறி சேகரிக்கும் கூடைகள் மற்றும் தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது விவசாயிகள் உற்பத்தியை பெறுக்கும் வகையில் தொழில் நுட்ப ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கவும், உற்பத்திப் பொருட்களை லாபகரமான விலையில் விற்க சந்தைகள் குறித்த விபரங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாய பணிகளுக்கு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், கூறினார்.

இந்த ஆய்வில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: