முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழாவாக திருவள்ளுவர் தினவிழா, பொஙகல்தினவிழா, தமிழ்புத்தாண்டு தினவிழாவாக தியாகதுருகம் சென்னை நெடுஞாலையில் உள்ள சமுதாய பராமரிப்பு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் இராதாகிருட்டிணன் தலமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் கொளஞ்சிவேலு, சங்க பொருளாளர் நாகராசன், சிறப்புத் தலைவர் இதயம்கிருட்டிணா முன்னிலை வகித்தனர். மோகன் வரவேற்றார். சண்முகம் பிச்சப்பிள்ளை, முத்தமிழ் முத்தன்,. பரிக்கல் ந.சந்திரன் உள்ளிட்டோர்கள் தமிழிசைப் பாடலுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளியின் தாளாளர் மணிமாறன் திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்தும் தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் கவிஞர்கள் ஆராவமுதன், நாராயணசாமி, கோவிந்தராசன், மலரடியான், அம்பேத்கார் உள்ளிட்டோர்களுக்கு திருவள்ளுவர் விருதினை வழங்கி பேசினார். மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத் தலைவர் முருகன் இலக்கியப் புரவலர் விருதினை தொழிலதிபர் நடராஜன், .முரளிபாபு, பழனிவேல், இராசேந்திரன், த.தண்டபாணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி பேசினார். விழுப்புரம் பாவேந்தர் பேரவை செயலாளர் உலக.துரை இலக்கியப் புலவர் விருதினை சா.சுப்பிரமணியன், முருகன் உள்ளிட்டோர்களுக்கு வழங்கி பேசினார். திருவள்ளுவர் தினத்தை போற்றும் வகையில் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த பீளமேடு, வேளானந்தல், உதயமாம்பட்டு, சின்னமாம்பட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்து திருக்குறள் வினாடி வினா நடத்தினார். அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தமிழரிமா சம்பத், மற்றும் ஜெயப்பிரகாஷ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். பொங்கல் விழாவினை போற்றும வகையில் தியாகதுருகம் நகரப் பகுதியில் கோலப்போட்டிகள் நடத்தினர். அதில் தெருக்களில் சிறப்பாக கோலமிட்ட முதல் மூன்று இடத்தினை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் மணியன் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அறிவழகன், செல்லமுத்து கவிதைத்தம்பி, சாரங்கபாணி, மோகன், சண்முகம் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

 

விழாவில் துரைசாமி,பர்ணபாஸ், அரங்க.மின்னல், கல்யாணி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். முடிவில் கந்தசாமி நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்