விடுமுறை நாளில் மது விற்ற 35 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      நீலகிரி

டாஸ்மாக் விடுமுறை நாளில், மது விற்ற, 35 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளுவர் தினமான, 15ல் டாஸ்மாக் கடைகளுக்கு, அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள், பார்கள், அனுமதி பெற்ற ஓட்டல்களில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. அன்றைய நாளில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், மது விற்ற, 35 பேரை கைது செய்தனர். அவர்களிடம், 350 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

இதை ஷேர் செய்திடுங்கள்: