நாகை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு எழுதியவர்கள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் : கலெக்டர் சு.பழனிசாமி தகவல்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      நாகப்பட்டினம்

ஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இராண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ ஃ மாணவியர்கள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் 19.01.2017 (வியாழக்கிழமை) அன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: