ஈரோட்டில் ஒரே நாளில் மூன்று இடங்களில் தீ விபத்து

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோட்டை அடுத்த திண்டல்மேடு புதுகாலனியில் உள்ள கட்டடத்தின் முதல் மாடியில் உள்ளது ஏ.எஸ்., ஓவர்சிஸ் கார்மெண்ட்ஸ். கீழ்தளத்தில் செயிண்ட் பால் அப்பேரல்ஸ் நிறுவனம் உள்ளது. நேற்று முன் தினம் மதியம், 2:30 மணிக்கு முதல்தளத்தில் உள்ள நிறுவனத்தில் தீப்பிடித்தது. தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.கே.கே. நகர் ரயில்வே லைனை ஒட்டி இருந்த குப்பையில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தீப்பிடித்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.சூரம்பட்டி எஸ்.கே.சி., சாலையில், கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. இதன் அருகே உள்ள எஸ்.கே., ஆட்டோ ஒர்க்சில், நேற்று முன் தினம் இரவு, 10:00 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அங்கிருந்த பழைய டயர்கள், பொருட்கள் தீக்கிரையாகின. சேத மதிப்பு கணக்கிடப்படுகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று தீ விபத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: