தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூகள ஆய்வு

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவைகளை நிவிர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.ஆய்விற்கு பின்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  தெரிவித்தாவது: புரட்சித்தலைவி அம்மா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் குடிநீர் தேவைகளை நிவிர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் 4.வது பைப்லைன் திட்டம் மற்றும் கோவில்பட்டியில் 2.வது பைப்லைன் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். தற்பொழுது இத்திட்டப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு தற்போது குடிநீர் வரும் பாதைக்கு அருகிலேயே கீழவல்லநாடு, முருகன்புரம், தெய்வச்செயல்புரம் மற்றும் வாகைக்குளம் பகுதிகளில் மாநகராட்சி மூலம் 15 முதல் 20 புதிய ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் 25 லட்சம் லிட்டர் குடிநீரினை மாநகராட்சி மூலம் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் நகருக்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.இவ் ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் இராஜாமணி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், செயற்பொறியாளர் லட்சுமணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: