நீலகிரியில் 35 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக்கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

                                   கிராம சபைக் கூட்டம்-

தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணைகளில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் காலாண்டிற்கு ஒருமுறை அதாவது ஜனவரி26(குடியரசு தினம்), மே1(தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2( காந்தி பிறந்த தினம்) ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

                                  கல்வி, வேலைவாய்ப்பு

நாளை(26) ந்தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடித்தல் தொடர்பாக உறுதிமொழி எடுத்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தர், திட்ட அறிக்கை, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம், தாய் திட்டம், மகளிர் திட்டம், புது வாழ்வுத்திட்டம், பொது விநியோகதிட்டம், ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்டறிக்கையை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் கிராம சபை கூட்டத்திற்கு முன் சமர்பித்தல், பாரதப் பிரதமரின் தொலை நோக்கு பார்வைத்திட்டம் 2032ன் படி நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட துறைகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யும் பொருட்டு 26_ந் தேதி நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் விவசாய வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பொது சுகாதாரம், நகர் மயமாக்குதல் போன்றவைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: