நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

 

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது. நாசரேத் பேராலய தலைமைகுரு தேவசகாயம் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பள்ளிகளின் மேலாளர் குமாரதாஸ் விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக சென்னை அப்பல்லோ டயர்ஸ் நிர்வாக தலைவர் ஜான்தேவதாசன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்கள்.

 

மாணவர்கள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு, தடகளப் போட்டிகள் மற்றும் கால்பந்து விளையாட்டு ஆகியன நடைபெற்றன. இதில் தனிநபர் சாம்பியன்களாக ஜூனியர் பிரிவில் அன்பழகன் என்ற மாணவனும், சீனியர் பிரிவில் பிரைசிங் சாமுவேல் என்ற மாணவனும், சூப்பர் சீனியர் பிரிவில் அருண் ஆசீர் என்ற மாணவனும் வெற்றிபெற்றனர்.ஒட்டுமொத்தகுழு சாம்பியனாக மஞ்சள்நிறஅணி வெற்றிபெற்றது.ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே கால்பந்து மற்றம் வாலிபால் போட்டிகள் நடந்தது. விளையாட்டுவிழாவில் கால்பந்து, சம்பா நடனம், பிரமீடு சாகசம், யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி தலைமையாசிரியர் த. ஜோசப் ஜெபராஜ் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் ஏ.டி.ஹெச்.சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் ஜான் தேவதாசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.மேலும் நாசரேத் மர்காஷிஸ் கால்பந்துகழக தலைவர் ரூபன் துரைசிங், பள்ளி பழைய மாணவர் சங்க செயலாளர் ஜட்சன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் துரைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழா நிறைவில் உடற்கல்வி இயக்குநர் கால்டுவெல் நன்றிகூற தலைமைக் குருவானவர் தேவசகாயம் நிறைவு ஜெபம் செய்தார்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர். மற்றும் தலைமையாசிரியர் தலைமையில் உடற்கல்வி இயக்குநர் கால்டுவெல் உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித், தனபால் மற்றும் ஆசிரியர்கள்,அலுவலர்கள். மாணவர்கள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: