தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      சென்னை
photo1

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி உத்தரவின் பேரில் மாதவரம் தாசில்தர் அலுவலகம் சார்பாக பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணி சென்னை அடுத்த புழல் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவ-மாணவியர் கலந்துக்கொண்ட பேரணியை மாதவரம் தாசில்தர் முருகநந்தம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் இருந்து செங்குன்றம் புழல் வில்லிவாக்கம் சாலை வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் வாக்கு சேர்ப்பதின் அவசியத்தையும் வாக்கு அளிப்பதின் முக்கியத்துவத்தையும் விளக்கும் பதாபதாகைகள் ஏந்திய வாரு பொதுமக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் அம்பத்தூர் ஆர்.டி.ஓ வி.விரப்பன் மாதவரம் துணை தாசில்தர் ரமேஷ் மாதவரம் வருவாய் அதிகாரி வெற்றிகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: