முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டியில் இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      சென்னை

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் சார்பாக தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் உரையுடன் என்ற புத்தகமும், மின்னல் கீற்று என்ற ஹைக்கூ புத்தகமும் வெளியிடப்பட்டது.

 

கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செந்தமிழ்ச்சோலை அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் வ.விஜயரங்கன் தலைமை தாங்கினார். செந்தமிழ்ச்சோலை நிர்வாகிகள் கோ.ம.கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன்,சீனிவாசன்,சிவராசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். சுரேஷ் வரவேற்றார்.

 

நிகழ்வில் செந்தமிழ்ச்சோலை நிறுவனர் பேராசிரியர் விஜயரங்கன், முனைவர் ப்ரீத்தா எழுதிய தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் உரையுடன் என்ற புத்தகமும், மின்னல் கீற்று என்ற ஹைக்கூ புத்தகமும் வெளியிடப்பட்டது.

 

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் மேற்கண்ட புத்தகத்தின் முதல் படியை வெளியிட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமையின் இணை இயக்குனர் கந்தசாமி புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

 

விழா முடிவில் கவிஞர் ரவி நன்றி கூறினார்.நிகழ்வில் பொதுமக்களும், செந்தமிழ்ச்சோலை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago