மனிதநேய வார நிறைவு விழா கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திருவண்ணாமலை
photo10

திருவண்ணாமலையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில்  கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பரிசு வழங்கி பாராட்டினார். திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாட்கோ மாவட்ட மேலாளர் எம்.இராமகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிதம்பரம், தாசில்தார் சி.பன்னீர்செல்வம், தனி தாசில்தார்கள் ஜி.வேடியப்பன், டி.அரிதாஸ், விடுதி காப்பாளர்கள் எஸ்.சிவக்குமார், ஆர்.திவாகரன், எம்.ராஜா, ஜான் பப்பீஸ், எம்.சேகர், சமூக நீதி மன்றம் மனித உரிமைகள் கமிட்டி உறுப்பினர்கள், கொத்தடிமை தொழிலாளர் நல கமிட்டி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, விடுதி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, விடுதி மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சிலப்பதிகாரத்தின் கண்ணகியின் பாத்திரம் போன்ற பல்வேறு நாடகங்களும் விழாவில் இடம்பெற்றிருந்தன. விழா முடிவில் தனி வட்டாட்சியர் நா.தீர்த்தமலை நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆதிதிராவிடர் மறறும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன், மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: