முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்டு டிரம்பை இங்கிலாந்துக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் கையெழுத்து மனு

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

லண்டன்  - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, தனது அழைப்பை திரும்ப பெற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு தயாரித்துள்ளனர்.

தெரேசா கோரிக்கை
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்பை, கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, டிரம்பை இங்கிலாந்து வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடன் விருந்து உண்ண வேண்டும் என ராணி விரும்புவதாக, தெரேசா கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு வருவதாக உறுதியளித்தார்.

நடவடிக்கைக்கு கண்டனம்
இந்நிலையில், அகதிகளாக வருவோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். மேலும், 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோருக்கும் அவர் தடை விதித்தார். இது உலகமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளின் தலைவர்களும் டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

டிரம்பிற்கு எதிராக...
டிரம்பின் நடவடிக்கையை எதிர்த்து இங்கிலாந்தில் உள்ள பொதுமக்கள் சுமார் 10 லட்சம் பேர், இங்கிலாந்து பிரதமர் டிரம்புக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற வேண்டும் என கையெழுத்து இட்ட மனுவை தயார் செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் என்ற முறையில் அவர் இங்கிலாந்திற்குள் வரலாம். ஆனால், இங்கிலாந்து சார்பில் அழைப்பு விடுக்கும் போது அது எங்கள் ராணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு செய்தாலே, அதை எம்.பி.க்கள் விவாதிக்க வேண்டும் என்பது இங்கிலாந்தில் உள்ள நடைமுறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்