சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது:

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      சேலம்

சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் எதுவும் தோன்றாமலும் மற்றும் பரவாமலும் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்ததாவது.பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள், தொடர்ந்து சளி மற்றும் காய்ச்சல், தொண்டையில் தொடர்ந்து வலி, தொண்டை கரகரப்பு இருத்தல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஆகும்.நோய் பரவுதலை தடுக்க போது மக்கள் கூட்ட நெரிசல் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டையால் முகத்தை மூட வேண்டும். அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை கழுவுதல் வேண்டும்.பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ள நோயாளிகளை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு ஒன்று வீதம் கிராமபுறங்களில் 20 அதிவிரைவு மருத்துவ குழுக்கள் மற்றும் மாநகராட்சிகளில் மண்டலத்திற்கு 1 வீதம் 4 அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு மருந்துகள் போதுமான அளவு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பன்றிக் காய்ச்சல் அறிகுறி எதுவும் தென்பட்டால், தனியார் மருத்துவர்கள் உடனடியாக சேலம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திற்கு 0427-245023 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: