முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பல்வேறு விவசாய நிலங்களின் பயிர் சேதங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர்  மாவட்டத்தில்,  வறட்சியால்  பாதிக்கப்பட்ட  பல்வேறு விவசாய   நிலங்களின்  பயிர்   சேதங்கள்  குறித்து   மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   இன்று (01.02.2017) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

                    திருப்பூர் மாவட்டத்தில், பருவ மழை பொய்த்ததன்  காரணமாக ஏற்பட்டுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்  சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெறுவதைத் தொடர்ந்து  மாவட்ட கலெக்டர்  திருப்பூர் தெற்கு வட்டம், பொங்கலூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் ஊராட்சியில்  கரியாம்பாளையம், முதலிபாளையம் பிரிவு, நல்லூர் கிராமம், முத்தணம்பாளையம் கிராமம் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின்பயிர் சேதங்கள் குறித்தும், பொங்கலூர்ஊராட்சி ஒன்றியம் தொங்கிட்டிப்பாளையம் கிராமம், மாதாப்பூர் ஆகிய  பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்படட விவசாய நிலங்களின் பயிர் சேதங்கள் குறித்தும் பல்லடம் வட்டம் வேலம்பாளையம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பூமலூர் கிராமம் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு குறித்தும் மாவட்ட கலெக்டர்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

                இந்த ஆய்வின்போது திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார், வேளாண்மை இணை இயக்குநர் ரெங்கநாதன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்