முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படிக்க வரும் இந்திய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது : யு.எஸ். பல்கலைக் கழகங்கள் அறிவிப்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய குடியேற்றக் கொள்கையால், அமெரிக்காவில் மேற்படிப்பு பயில வரும் மாணவர்களுக்கு, எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்றும், அவர்கள் வழக்கம்போல அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சேரலாம் என்றும், பல்கலைக்கழகங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சில அவசர உத்தரவுகள்:

அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் மாற்றங்கள் செய்து புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சில அவசர உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி, ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளில் இருந்து எவரும் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, டிரம்ப் நிர்வாகம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்குச் சென்று உயர்கல்வி பயில விரும்பும் ஏராளமான மாணவர்களுக்கு டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமும் அவர்களிடையே நிலவுகிறது. அவர்களின் கவலையை போக்கும் வகையில் பல்வேறு அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில் , இந்திய மாணவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், அவர்கள் எப்போதும்போல அமெரிக்க பல்கலைக் கழகங்களில் கல்வி பயில எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் உத்தரவுக்கும், படிப்புக்காக அமெரிக்கா வரும் மாணவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அமெரிக்காவில் குடியேற விரும்புவோர் மட்டுமே டிரம்ப்பின் புதிய உத்தரவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளன.

அதிபருக்கு எதிராக போராட்டம்:
குடியேற்றக் கொள்கையில் டிரம்ப் கொண்டுவந்த மாற்றத்தைத் தொடர்ந்து, ஒரு லட்சம் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள அந்நாட்டு மக்கள், போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

1 லட்சம் விசாக்கள்  ரத்து :
அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தின் அடிப்படையில், அந்நாட்டின் புதிய அதிபர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு குடியேறுவதை தடுக்கும் வகையில், குடியேற்ற கொள்கையில் திருத்தம் கொண்டு வந்து டிரம்ப் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், 1 லட்சம் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு :

இதனிடையே, டிரம்ப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அமெரிக்காவின் சியாடில்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிரம்ப்பின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்க மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாஷிங்டன் டி.சி.யில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்குள்ள புகழ்பெற்ற டிரம்ப் இன்டர்நேஷ்னல் ஹோட்டல் முன்பாக, அதிபர் டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், நடனமாடியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். டிரம்ப்பின் பாகுபாடான அறிவிப்புகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்