முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகடன் மத்திய அரசு தள்ளுபடி செய்ய பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்தியஅரசு உடனடியாக தள்ளுபடி செய்ய உத்திரவிட வேண்டும் என அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.     வேலூர் கிழக்கு மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி பாமக பொதுக்குழு கூட்டம் தனியார் விடுதியில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் நகர செயலாளர் ப.ஜெகநாதமுதலியார் வரவேற்று பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் வக்கில் க.சரவணன் சிறப்புரை ஆற்றினார்.     மாநில மாணவரணி செயலாளர் ப.பிரபு, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் மா.மின்னாளன், தலைமை நிலைய செயலாளர் தம்பிஏழுமலை, மாவட்ட பொருளாளர் கோ.உமாமகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிஜி.ராமசாமி, வன்னிர் சங்க செயலாளர் ஏழுமலை, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும்.     மேலும், இ.கிருஷ்ணன், துளசி பஞ்சாட்சரம், கதிரவன், லோகியா, மதிநிறைச்செல்வன், செ.ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் கலந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் விரைவாக முடிக்க வேண்டும். பருவமழை பொய்த்து போனதால் வேலூர் மாவட்ட விவசாயிகள் மிகவும் துன்பத்திற்கு தள்ளபட்டு விட்டனர் எனவே, மத்தியஅரசு விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும்; என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இறுதியில் நகர தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்