வண்ணார்பேட்டை மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் .கருணாகரன் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Collector Function

திருநெல்வேலி,

 

திருநெல்வேலி, வண்ணார்பேட்டை சாலை தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க தின முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலெக்டர்மு.கருணாகரன் கலந்து கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி, முகாமினை துவக்கி வைத்தார்கள். பின்னர் கலெக்டர்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது- நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வையில் இன்று வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 8,62,823 குழந்தைகளுக்கு (1 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு) வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஙூ மாத்திரை (200 மி.கி) அல்லது 5 மி.கிராம் மருந்தும், 2 வயதிற்கு மேல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு மாத்திரை (400 மி.கி) அல்லது 10 மி.கிராம் (ளுலசரயீ) மருந்தும், 2 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை அல்பெண்டசோல் (400 மி.கி) வழங்கப்படுகிறது. இத்தடுப்பூசி போடுவது தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ராம்கணேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அப்துல்காதர், வண்ணார்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அலுவலர் மரு.ரமேஷ், உதவி தொடக்கப்பள்ளி அலுவலர் கலைச்செல்வி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: