முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம்: 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய ஊழல் ப.சிதம்பரம் கடும் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

மும்பை : உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது 2016-ம் ஆண்டில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  கடும் குற்றச்சாட்டை கூறிள்ளார்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடி திடீரென்று உயர்மதிப்புள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அங்கு வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்,அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய ஊழல்:

உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது 2016-ம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய ஊழலாகும். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2016-17-ம் ஆண்டில் 6 சதவீதம் முதல் 6.5 சதவீதமாகத்தான் இருக்கும். மத்திய புள்ளியியல் அமைப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்ததற்கும் குறைவானதுதான். 2016-2017-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாகவும் இந்திய ரிசர்வ் வங்கி 6.9 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அறிவித்தது. அதைவிட குறைவாகத்தான் பொருளாதார வளர்ச்சி உள்ளது.

1.5 லட்சம் கோடி பாதிப்பு:

2016-17-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாகத்தான் இருக்கும் என்று நான் முன்கூட்டியே சொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு  குறையும். இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 1 சதவீதம் குறைவாகும். யாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கூறியுள்ளனர். அதைக்கேட்ட பிரதமர் உடனே டெலிவிஷனில் ரூ.500,ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டார். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ரூ.1.5லட்சம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் 6.5 சதவீதம்:

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2016-17-ம் ஆண்டில் அதிகரிக்காததாலும் வெள்ளை மாளிகையில் எதிர்பாராத ஒருவர் அதிபராக இருப்பதாலும் இந்தியாவில் வரும் 2017-2018-ம் ஆண்டிலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார  வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாகத்தான் இருக்கும். அடுத்த 2018-19-ம் ஆண்டிலும் இதே பொருளாதார வளர்ச்சிதான் இருக்கும். உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தவறு என்று பின்னர் மத்திய அரசு உணர்ந்தது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஒரே இரவில் ரூ.15.44 லட்சம் கோடி ரூபாய் செல்லாதாகிவிட்டது. பின்னர் இந்த அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்