முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி தலைவருக்கு 3 மடங்கு சம்பள உயர்வு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - யு.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தற்போது மாத சம்பளமாக ரூ.90 ஆயிரம் பெறுகின்றனர். இந்நிலையில் யுபிஎஸ்சி தலைவரின் சம்பளத்தை ரூ.2,50,000 ஆகவும் யுபிஎஸ்சி உறுப்பினர்களின் சம்பளத்தை ரூ.2,25,000 ஆகவும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் இதற்கான பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித் துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியபோது,  “ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில் இந்த ஊதிய உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. யுபிஎஸ்பி தலைவரின் சம்பளம், அமைச்சரவை செயலாளரின் சம்பளத்துக்கு இணையாக இருக்கும். இதுபோல் யுபிஎஸ்சி உறுப்பினர்களின் சம்பளம், செயலாளரின் சம்பளத் துக்கு இணையாக இருக்கும்” என்றார். ஆண்டுதோறும் 3 கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு பதவி களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்