ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி மார்ச் 9ல் துவக்கம்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

 

தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம் சார்பில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சி மார்ச் மாதம் 9ம் தேதி கோவில்பட்டியில் துவங்குகிறது. இது தொடர்பாக ஆட்சியர்எம். ரவி குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியினை வரும் மார்ச் மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (THUDITSSIA) இணைந்து நடத்தவுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,500/-ஆகும்.

 

உலகமயமாக்களின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்ற பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

 

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய எண்ணும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு முடித்த ஆண்/பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி கட்டணம் ரூ.3,500/- ஆகும். பயிற்சி நடக்கும் இடம் ரேவா விளாசா, 438 மெயின் ரோடு, பழைய பேருந்து நிலையம், கோவில்பட்டி. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரை தொழில்முனைவேர் மேம்பாட்டு நிறுவத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

இப்பயிற்சி பற்றி கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. தொலைபேசி எண் 044-22252081 / 22252082 8754598984 இணையதளம்: www.editn/in தூத்துக்குடி தொலைபேசி எண் : 0461-2347005 / 9840158943)

 

இதை ஷேர் செய்திடுங்கள்: