திம்மாம்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 242 பயனாளிகளுக்கு ரூ.21,92,100- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      வேலூர்
ph vlr

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் திம்மாம்பேட்டை கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் டாக்டர்.கா.ப.கார்த்திகேயன், முன்னிலை வகித்தார்.வாணியம்பாடி வட்டாட்சியர் முரளி வரவேற்புரையாற்றினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பேசியதாவது:- மனுநீதி நாள் முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அத்தகவல்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டத்திலும் உள் வட்டாரங்களில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இக்குறை தீர்ப்பு கூட்டங்களில் அதிகமாக முதியோர் ஓய்வூதியம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வேண்டி மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் தகுதியுடைய பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படுகிறது. இதே போல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. இவ்வளவு சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும் நம் மக்களிடையே இன்னும் அதிக குறைகள் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய மக்கள் தொகை அதிக அளவு இருப்பதே ஆகும். தற்போதுள்ள வறட்சியான நிலையில் மக்களின் முக்கியமான தேவை குடிநீர். உங்களுடைய பகுதியில் குடிநீர் போதுமான அளவு உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கேனும் குடிநீர் பிரச்சனை இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்றார்.. இவ்விழாவில் வருவாய்துறையின் மூலம் 114 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், சிறு குறு விவசாயி, வாரிசு, இருளர் சான்றிதழ்களையும், முதியோர் உதவித் தொகை போன்ற நிதியுதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு சலவை பெட்டியும், வேளாண் துறையின் சார்பாக 8 பயனாளிகளுக்கு விதைப்பைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபருக்கு உதவித் தொகையும், பல்வேறு விபத்துகளில் பாதிப்படைந்த 25 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையும், சமூக நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி, பசுமை வீடு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு இலவச வீடுகளும், இந்திய ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கடனுதவி தொகையும் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் மூலம் 81 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் ஆக மொத்தம் 246 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்தி 92 ஆயிரம் 100ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், இணை இயக்குநர் (கால்நடை) மரு.அர்த்தனாரி, துணை இயக்குநர் (கால்நடை) மரு.மனோகரன், இணை இயக்குநர் (வேளாண்மை) டேவிட்ராஜா, உதவி இயக்குநர் (வேளாண்மை) சோமு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சந்தியா மகேஸ்வரி, துணை இயக்குநர் (நோய் தடுப்புத் துறை) மரு.தேவபார்த்தசாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை நிஷாந்தினி, இணை இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.முரளிதரன், வெங்கடேசன், திம்மாம்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி, தொடக்க கல்வித் துறை அலுவலர் சித்ரா, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மதிவாணன் நன்றியுரையாற்றினார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: