முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து 28-ந் தேதி ம.தி.மு.க.ஆர்ப்பாட்டம்: வைகோ

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து வரும் 28-ந் தேதி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகாரத் திட்டத்திற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுமதி வழங்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்து, 04.01.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.

மக்கள் கொந்தளிப்பாலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.ஆனால், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை, மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகச் செயற்படுத்த முடிவு எடுத்து இருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் வேறுபாடு இல்லை.

எனவே, தமிழகத்தின் நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனையும் மத்திய அரசைக் கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில், என் தலைமையில், 28-ந் தேதி   11 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்