முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது: கலெக்டர் வா.சம்பத், தகவல்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இது குறித்து கலெக்டர் வா.சம்பத், தெரிவித்ததாவது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 முறையே 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி செட்டிமாங்குறிச்சி, ஆச்சார்யா மேல்நிலைப் பள்ளி எடப்பாடி, மாதிரிப் பள்ளி காடையாம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி தீவட்டிப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி மாதையன்குட்டை, புனித மரியன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேட்டூர் அணை, ஏ.ஜீ.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கொங்கணாபுரம், மாதிரிப்பள்ளி மகுடஞ்சாவடி, அரசு உயர்நிலைப்பள்ளி வைகுந்தம், ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேச்சேரி, மீனம்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேச்சேரி, அரசு உயர்நிலைப்பள்ளி கோனூர், அரசு உயர்நிலைப்பள்ளி குஞ்சாண்டியூர், சௌத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓமலூர், விஸ்டம் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓமலூர், அரசு மேல்நிலைப்பள்ளி நட்டுவம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி அக்கம்மாபேட்டை, செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாரமங்கலம், ஜோதி மேல்நிலைப்பள்ளி தாரமங்கலம், ஏ.இ.டி மேல்நிலைப்பள்ளி அப்பம்மாசமுத்திரம், ராசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஈச்சம்பட்டி , ஜெய்மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி வாய்க்கால்பட்டறை, ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காமராஜர் நகர் காலனி, ஜி.இ.டி எஸ்செலண்ட் மெட்ரிக் பள்ளி கெங்கவல்லி, காமராஜர் மெட்ரிக் பள்ளி தெடாவூர், கிறிஸ்டோபர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனமரத்துப்பட்டி, வித்யபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நெய்காரப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி ஏத்தாப்பூர், புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி தும்பல், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி சேலம், நகரவை உயர்நிலைப்பள்ளி செவ்வாய்பேட்டை, ஜெயம் மெட்ரிக் பள்ளி மணிவிழுந்தான் தெற்கு, பாரதியார் மேல்நிலைப்பள்ளி தேவியாக்குறிச்சி, புனித மைக்கேல்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணிக்கம்பட்டி ரோடு, வாழப்பாடி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுப்பாளையம், வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெத்தாம்பட்டி, வித்யவாஷினி மேல்நிலைப்பள்ளி ஆட்டையாம்பட்டி, புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி சூசைகிரி, ஏற்காடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சேலம், அரசு உயர்நிலைப் பள்ளி கொண்டப்பநாயக்கன்பட்டி சேலம் ஆகிய மையங்களில் 06.03.2017 முதல் 22.03.2017 வரையுள்ள நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளன. விற்பனை மையங்கள் தொடர்பாக, மாவட்ட வாரியான விவரங்கள் தேர்வு வாரிய இணையதளத்திலும் காணலாம். ஒரு விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-ஐ தொகையாக அளித்து விண்ணப்பத்தினை விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இருதேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேலம் மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள சிறுமலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நான்குரோடு சேலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திருவள்ளுவர்சிலை அருகில் சேலம், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுப்பாளையம், வாழப்பாடி சேலம், ஏ.இ.டி மேல்நிலைப்பள்ளி அப்பம்மாசமுத்திரம், ஆத்தூர் சேலம், ஜி.இ.டி எக்ஸெலண்ட் மெட்ரிக் பள்ளி கெங்கவல்லி சேலம், ஆகிய மையங்களில் 06.03.2017 முதல் 23.03.2017 வரையுள்ள நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர) திரும்ப பெறப்படும்.மேலும், விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டிருப்பினும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அளிக்கலாம். எனவே தகுதியுடையவர் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்