ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 40 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
2

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் அரசு தொழிற்நுட்ப கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் சி.கதிரவன் தலைமையுரை நிகழ்த்தினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், மாநில நிலவள வங்கி தலைவர் பி.சாகுல்அமீது, வித்ய மந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் வி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அரசு தொழிற்நுட்ப கல்லூரி முதல்வர் சி.தயாளன் அனைவரையும் வரவேற்றார். பின்பு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பேசும்பொழுது.இந்தியாவிலேயே எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களில் ஒன்றான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் கொண்டுவந்தார்கள். இத்திட்டம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் தாயுள்ளத்தோடு மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் பல்வேறு திட்டத்தின் கீழ் நிதியினை ஒதுக்கி நலதிட்ட உதவிகள் புதிய கட்டிடங்கள் கட்டுதல், அடிக்கல் நாட்டுதல் என முடிக்கப்பட்ட பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொள்வது அம்மா அவர்களின் அரசு தான். தற்பொழுது பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 40- நபர்களுக்கு இந்த விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த கல்லூரிக்கு கட்டடம் கட்ட ரூ.16 கோடி ரூபாய் நிதியை அம்மாவுடைய அரசு ஒதுக்கீடு செய்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கும் விடப்பட்டுள்ளது. ஆகையினால் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை பெற்று மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையிலும், கல்வியிலும் முன்னேற வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.இந்நிகழ்ச்சியின்போது தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் கோ.ரவிசந்திரன், கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, கூட்டுறவு வீட்டுவசதி தலைவர் பி,கே.சிவானந்தம், மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ;தலைவர் ஏ.சி.தேவேந்திரன், வட்டாட்சியர் சுப்பிரமணி, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: