முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியனை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தொடங்கி வைத்தார்.

வழிகாட்டி நிகழ்ச்சி

            திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்புத் துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்திய கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் 3 விடுதிகளில் உள்ள கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கல்லூரி படிப்பு முடித்த உடன் மேற்படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பெறுவது குறித்தும் சிறப்பான முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது.  தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக சுய வேலை வாய்ப்பு திட்டங்களுக்கான கடனுதவி பெறுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இக்கருத்தரங்கினை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்  இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில்  பங்கேற்று,  தங்கள் வாழ்வில் மேம்படைய வேண்டும் என தெரிவித்தார்கள்.

 

            இந்நிகழ்வின் போது, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பழனியம்மாள், தாட்கோ மாவட்ட பொது மேலாளர் சுந்தர வடிவேல், மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மூ.காளிமுத்து, கல்லூரி  மாணவ, மாணவியர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்