முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் மரகதாம்பாள் சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழாவையொட்டி தமிழக அரசின் சாதனைகள் குறித்த, புகைப்படக் கண்காட்சி:அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருள்மிகு மரகதாம்பாள் சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழாவையொட்டி , கோயில் வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் நலத் திட்டங்கள், சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சியை இன்று (12.03.2017) கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன் தலைமை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் அனைவரையும் வரவேற்றார். இ;ப்புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்பட கண்காட்சியில் பசுமை வீடு வழங்கும் திட்டம், மடிகனிணி வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுகள், மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள், திருமண நிதிவுதவி வழங்கும் திட்டங்கள், மகபேறு நிதிவுதவிகள் வழங்கும் திட்டங்கள், வறட்சி நிவாரண நிதி உதவி வழங்குதல், கூட்டுறவு கடன் தள்ளுபடி பயனாளிகள் புகைப்படங்கள், ஏரி தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்படங்கள், கூட்டுறதுறை மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் கடனுதவிகள் வழங்கும் புகைப்படங்கள், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கால் நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனங்கள் வழங்கும் திட்ட புகைப்படங்கள் மழை நீர் சேகரிப்பு திட்ட புகைப்படங்கள், கால் நடை மருத்துவ முகாம் புகைப்படங்கள் என 120- க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு பொதுமக்கள் அரசின் சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளவும், மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது. இப்புகைப்படக்கண்காட்சியினை 10,000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பள்ளி; பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஓசூர் சார் ஆட்சியர் டாக்டர் கே.செந்தில் ராஜ், இ.ஆ.ப., நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் பூசன் குமார், துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சிவகுமார், தருபுமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், மற்றும் பால் நாரணயணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நந்தகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சு.மோகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) ஒ.ர.மனோஜ் குமார் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago