முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை ஊராட்சியில் உள்ள       ஸ்ரீ.வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,  சுற்றுச்சூழல் துறை கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்ததாவது,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  அமைதி, வளம், வளர்ச்சி என்ற உயரிய நோக்கோடு இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2,05,734 பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி போன்ற கல்வித்தகுதிகளையும், ஓட்டுநர், நடத்துநர் எலக்ட்ரீசியன், பிட்டர், மோட்டார் மெக்கானிக், மருந்தாளுநர், லேப் டெக்னீசியன், நூலக அறிவியல் சான்றிதழ் போன்ற தொழில் நுட்பத் தகுதிகளையும், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் போன்ற ஆசிரியர் கல்வித் தகுதிகளையும் பதிவு செய்து அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து புதிப்பித்து வருகின்றனர். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற பதிவுதாரர்களை ஊக்குவிக்கும் விதிமாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தவறாமல் நடத்திட  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி மாதந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மலைப்பகுதியில் வசிக்கும் படித்த இளைஞர்களுக்காக தாளவாடி, பர்கூர், கடம்பூர் மற்றும் ஆசனூர் ஆகிய இடங்களில் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இவைத்தவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அளிக்கப்படும் பல்வேறு திறன் எய்தும் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு உதவி மையம் செயல்பட்டு வருகிறது இம்மையத்தில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளுதல், வழிகாட்டும் தகல்கள் அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 63,946 நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 2015-16-ம் நிதியாண்டில் ரூ.16,90,87,450/- உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெறும் தமிழ்நாடு அரசு வழங்கி வந்த உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டுள்ளது. பள்ளியிறுதி வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ,200/-இ பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களக்கு ரூ.400/-, பட்டதாரிகளுக்கு ரூ.600/- என தற்போது உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஓராண்டு முடிந்தவுடன் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600/-இ 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-, பட்டதாரிகளுக்கு ரூ.1000/- என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி அனைவரும் வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல் துறை கே.சி.கருப்பணன்  தெரிவித்ததாவது,

அனைவருக்கும் வேலை என்ற உயரிய நோக்கோடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா  பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகின்றது.  அம்மா  சிறப்பாக செயல்படுத்திய தொழில்முதலீட்டார்கள் மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. அம்மாநாட்டில் ரூ.2,42,742 கோடி  தொழில் முதலீடாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் தரும் அரசாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறந்த கல்வியாளர்களாக மட்டுமல்லாமல் பண்பாளர்களாகவும் இன்றைய இளைய சமுதாயத்தினர் விளங்க வேண்டும். இன்று சிறப்பான முறையில் தொடங்கியிருக்கும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை நல்லமுறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

இம்முகாமில் 130 இன்ஜினியரிங் மற்றும் 125 பொறியியல் சாராத நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. கோயம்புத்தூரிலிருந்து 70 நிறுவனங்கள்,  சென்னையிலிருந்து 100 நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 50 நிறுவனங்கள் என பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளித்து அனைவரும் பணிநியமன ஆணையினை பெற வேண்டும். நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.

இம்முகாமில் ஹ{ண்டாய் மோட்டாஸ், ஈட்சர் மோட்டாஸ், ஐ.டி.சி. லிமிடெட், சாரதா டெரி புராடக்டஸ், ரூட்ஸ் இன்டஸ்டிரிஸ், சாந்தி கியர்ஸ், லட்சுமி மிஷின்ஸ், சக்தி சுகர்ஸ், ஏ.பி.டி. இன்டஸ்டிரிஸ், அப்பல்லோ டயர்ஸ், லான்சன் மோட்டார்ஸ், சக்தி ஆட்டோ காம்பொனன்ட்ஸ், டி.வி.எஸ். மோட்டார்ஸ், எச்.சி.எல், டெக் மகேந்திரா, ஐ.டி.பி.ஐ இன்சூரன்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, சதர்லேண்ட், டாடா லைப் இன்சூரன்ஸ், முத்தூட் பைனான்ஸ், எல்.ஜி.பி, எல்.ஐ.சி.ஆப் இந்தியா, அமிர்தா பால், செய்ண்ட் கோபியன் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கும். இவர்கள் பொறியாளர்கள், சூப்பர்வைசர்ஸ், மேனேஜர்ஸ், அட்மினிஸட்ரேட்டர், அக்கவுண்ட், /போர்மேன், மெஷின் ஆப்ரேட்டர்ஸ், ஊNஊ மெஷின் ஆப்ரேட்டர்ஸ், வெல்டர்ஸ், பிட்டர்ஸ், லேத் ஆப்ரேட்டர்ஸ், ஹெல்ப்பர்ஸ், எலக்ட்ரிசியன்ஸ், மோல்டர்ஸ், சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு பதவிகளுக்காக திறனறிந்து பதிவுதாரர்களை தேர்வு செய்தனர்.

இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்) சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர்  லதா, இணை இயக்குநர் ஞானசேகரன், உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம்  சாந்தா, கல்லூரியின் தலைவர் வெங்கடாசலம், கல்லூரியின் நிர்வாக இயக்குனர் க.கௌதம், நிர்வாக உறுப்பினர்  கே.சி.கனேசன்,  ஈரோடு வேலை வாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்