முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி: அமைச்சர் கடம்பூர்ராஜூ வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார், தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ 254 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 152 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவும், 199 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையும் என 605 பயனாளிகளுக்கு ரூ.91 இலட்சத்து 63 ஆயிரத்து 500 மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். வருவாய்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைவாகவும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிறப்பு வாய்ந்த  பல்வேறு திட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு நன்மைகளை பெற்று வருகின்றனர்.கல்விக்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை போன்றவைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று 500 மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகையும் விரைந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியர்  அனிதா, விளாத்திகுளம் வட்டாட்சியர் ஈஸ்வரநாதன், சமூக நலத்துறை வட்டாட்சியர் சேதுராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்