பிஎன்பி பரிபாஸ் ஓபன்: இறுதிச் சுற்றில் ரோஜர் பெடரர்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      விளையாட்டு
Roger Federer 2017 3 19

வெல்ஸ் நகர்  - பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி, இந்தியன் வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஜாக் சாக்கை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் ரோஜர் பெடரர் 6—1, 7—6 என்ற நேர் செட்களில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இத்தொடரில் பெடரர் ஏற்கெனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து வீரரான வாவ்ரிங்கா, ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்டாவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் வாவ்ரிங்கா 6—3, 6—2 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் ரோஜர் பெடரருடன் மோதவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: