முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி வக்கீல் அமுல் தாப்பர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவின் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாப்பர் என்பவரை நியமித்து அந்நாட்டின் அதிபரான டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

‘சர்க்யூட்’
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. அவ்வகையில், நான்கைந்து மாநிலங்களில் இருந்து தொடரப்படும் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக ஒரு குழுமம் அமைக்கப்பட்டு, அந்த குழுமம் ‘சர்க்யூட்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

அமுல் தாப்பர் நியமனம்
இந்நிலையில், இந்த சர்க்யூட் குழுமத்தில் 20 நீதிபதிகளை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.  இவர்களில் கென்ட்டுக்கி, டென்னெஸ்ஸி, ஓஹியோ மற்றும் மிச்சிகன் பகுதிகளில் இருந்துவரும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் ஆறாவது சர்க்யூட் நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாப்பர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல துறைகளில் உறுப்பினராக ...
கடந்த 2006-2007-ம் ஆண்டு கென்ட்டுக்கி மாவட்ட அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு பல வழக்குகளை திறம்பட நடத்திய அமுல் தாப்பர்(47), இந்த பதவியில் நியமிக்கப்பட்ட முதல் தெற்காசிய வக்கீல் என்ற பெருமைக்குரியவராக அப்போது அறியப்பட்டார். அமெரிக்க அரசின் தீவிரவாத தடுப்பு, உள்நாட்டு பாதுகாப்பு துணைக் குழு, கொடுங்குற்றம் தடுப்பு குழு, சிறார் பாலியல் கொடுமைகள் தடுப்பு குழு ஆகியவற்றிலும் உறுப்பினராக இடம்பெற்றிருந்த இவர், சட்டத்துறை சார்ந்த உயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்