முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் .இல.சுப்பிரமணியன், தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

 

இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் அடையாள அட்டை ஆகியன கோரி 438 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் மதுரா பிள்ளைச்சாவடி கிராமம் ராஜகோபாலன் மகன் காத்தவராயன் என்பவர் கடலில் மூழ்கி இறந்தது தொடர்பாக, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை செல்லியம்மாள் என்பவருக்கும், விழுப்புரம் நகரத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் செல்வன.ருத்ரகணேஷ் என்பவர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தது தொடர்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் பதினைந்தாயிரத்திற்கான காசோலையை வேலாயுதம் என்பவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், சின்னசேலம் வட்டம், கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கன் மற்றும் ஐந்து நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை கலெக்டர் .இல.சுப்பிரமணியன், வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) பத்ரிநாத், தனித்துணை ஆட்சியர் (ஆர்பிட்ரேஷன்) சுரேஷ்குமார், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரவிச்சந்திரன், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்