முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவிற்கு விவசாயிகள் மரம் நடவு செய்து பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

5265 மீட்டர்

 இந்த வருடம் பருவ மழை பெய்த்து போன நிலையில் ஏரிகள் வறண்டதால் விவசாயத்திற்கு கிணறுகளிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி மரங்களுக்கும் விவசாய பாசனத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த 9 மின் கம்பங்களின் இடையே உள்ள மின் ஒயர்கள் சுமார் 5265 மீட்டர் ஒயர்களை அடையாளம் தெரியாத நபர்களால் இரவு நேரத்தில் திருடப்பட்டது. மின்சாரம் இல்லாததால் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்கள் கருகத் துவங்கியுள்ளது. இது சம்மந்தமாக மின்சார துறை அலுவலகத்தில் விவசாயிகளால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரத்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிமாக உள்ளனர். இதனால் 25 ஏக்கர் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் மற்றும் மரங்கள் வெய்யிலின் தாக்கத்தால் கருகி வருகிறது. எனவே சம்மந்தபட்ட மின்சார துறை அதிகாரிகள் திருடு போன ஒயர்களுக்கு பதில் வேறு ஒயர்கள் மாற்றி அமைத்து விவசாய பயிர்கள் மரங்கள் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்