முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தாண்டு உருளைக்கிழங்கு உற்பத்தி அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி  இந்தாண்டு 47 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் முக்கிய உணவுப்பொருள்களில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருக்கிறது. இது கடந்த 2014-15-ம் ஆண்டில் 48 லட்சம்  டன்னாக உயர்ந்து சாதனை நிகழ்த்தப்பட்டது. கடந்த 2015-16-ம் ஆண்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி 43.5 லட்சம் டன்னாக இருந்தது. இந்தாண்டு உருளைக்கிழங்கு உற்பத்தி 47 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2014-15-ம் ஆண்டில் சாதனை நிகழ்த்தப்பட்டதை விட கொஞ்சம்தான் குறைவாகும் என்று தேசிய தோட்டக்கலை வாரிய நிர்வாக இயக்குனர் சிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு உருளைக்கிழங்கு உற்பத்தி 43.88 லட்சம் டன்னாகத்தான் இருக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஆய்வு செய்ததில் உற்பத்தி 47 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று தெரிகிறது என்றும் சிங் தெரிவித்தார்.

கடந்தாண்டு அளவு நிலப்பகுதியில்தான் இந்தாண்டும் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் காலநிலை மற்றும் உருளைக்கிழங்கை அறுவடை செய்வதற்கு முன்பு மழை பெய்ததால் உற்பத்தி அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய 3 மாநிலங்களில்தான் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகமாக இருக்கும். இந்தாண்டு அந்த மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு இந்தாண்டு 15 லட்சம் டன் வரை உருளைக்கிழங்கு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு இந்த மாநிலத்தில் 13.8 லட்சம் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டது.  விவசாயிகளின் குறைகளை தீர்க்க இப்போதே உருளைக்கிழங்கு கொள்முதலை மத்திய அரசு தொடங்கிவிட்டது. மேலும் மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் உருளைக்கிழங்கு உற்பத்தி முறையே 8 லட்சம் மற்றும் 6 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   a

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்