எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் தொடங்கிய தர்மயுத்ததிற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் முடிவு
ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற தினகரன் உட்பட அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக ( புரட்சித்தலைவி) அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், செம்மலை, மாபா.பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ, ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது, இந்த ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி அதை மக்கள் இயக்கமாக வளர்த்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் 29 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்து பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு அதிமுகவை, மக்களின் இயக்கமாக மாற்றி எம்.ஜி.ஆர். வழியில் கட்சியை நடத்தினார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்று விட்டது. இதை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே சசிகலா குடும்பத்தை தடுக்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு பெரும் தலைவர்களின் கொள்கைபடி இந்த கட்சி இயங்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையை முன்வைத்து தர்மயுத்தம் நடத்தப்பட்டது.
முதல் வெற்றி
இன்று அ.தி.மு.க.வை இணைப்பதற்கான அந்த தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். எங்கள் தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, எந்த நோக்கத்திற்காக அறப்போராட்டம் நடந்ததோ அதன்படி தொடர்ந்து மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து நடைபெறும்.இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம்தான் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம். நாங்கள் இரு தரப்பினரும் பேசி தொண்டர்கள் விருப்பம், மக்கள் விருப்பம் எதுவோ அதை நடைமுறைப்படுத்துவோம். இதற்காக இரு தரப்பினரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுப்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தொண்டர்கள் உற்சாகம்
அதிமுகவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவதாக அறிவித்து அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு காலை 8 மணி முதலே ஏராளமான அதிமுக தொண்டர்கள் வருகை தருவதை காணமுடிந்தது. அப்போது ஜெயலலிதா வாழ்க, ஓபிஎஸ் வாழ்க என தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டவாறு இருந்தனர்.
பேச்சுவார்த்தை
அதிமுக அணிகள் இணைவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள் கொண்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் நேற்று இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் மாபா பாண்டியராஜன், செம்மலை உட்பட 4 எம்எல்ஏக்கள், மைத்ரேயன், சுந்தரம் ஆகிய 2 எம்பிக்கள் என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைச்சர்களுடன் இன்று தங்களது முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவார் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மீண்டும் ஆலோசனை
ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை
26 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பிரதமர் மோடி நாளை ரோடு ஷோ
26 Nov 2025உடுப்பி : கர்நாடகத்தில் உள்ள உடுப்பியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் குத்யாரு நவீன் ஷெட்டி தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
தாய், தந்தை, குரு, தெய்வமாக நமது அரசியலமைப்பு உள்ளது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
26 Nov 2025புதுடெல்லி, அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு வழங்கும் மதிய உணவில் மாற்றம்
26 Nov 2025சபரிமலை : சபரிமலையில் இனிமேல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
-
ஈரோடு மாட்டத்தில் அரசு விழா: ரூ. 605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,
-
வரும் 29-ம் தேதி திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
26 Nov 2025சென்னை : வரும் 29-ம் தேதி தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வி
-
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
26 Nov 2025டெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
இந்தியா ஒரு கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு முதல்வர் பதிவு
26 Nov 2025சென்னை, இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்று அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
2026 -மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியில் இன்று மெகா ஏலம்
26 Nov 2025புதுடெல்லி : 2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டி தொடருக்கான மெகா ஏலம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
-
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
26 Nov 2025மதுரை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்
26 Nov 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்.
-
ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
26 Nov 2025ஈரோடு, ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 Nov 2025சென்னை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
அரசமைப்பு சட்டப்பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Nov 2025புதுடெல்லி : மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.
-
விளம்பர தூதர் ரோகித் சர்மா
26 Nov 20252026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை விளம்பர தூதராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
-
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
செங்கோட்டையனுடன் அமைச்சர் திடீர் சந்திப்பு
26 Nov 2025சென்னை : செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையனுடன் அமைச
-
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு
26 Nov 2025சென்னை : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற
-
தமிழ்நாட்டிற்கு 'சென்யார்' புயலால் பாதிப்பு இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Nov 2025சென்னை, மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தேசிய பால் தினத்தை முன்னிட்டு அமைச்சர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
26 Nov 2025சேலம் : தேசிய பால் நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
-
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
26 Nov 2025சென்னை, இந்திய அரசியலமைப்பின் மாண்பையும், அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை: ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
26 Nov 2025ஈரோடு, விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.


