திருவொற்றியூரில் இரத்ததான முகாம்

திங்கட்கிழமை, 1 மே 2017      சென்னை

 

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீ சபரி சேவா சங்கத்தின் 17ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் கனிவுகரங்கள் முதியோர் இல்லத்தின் 12ம் ஆண்டு துவக்க விழா திருவொற்றியூர் ஸ்ரீ சங்கரவித்யாகேந்திரா பள்ளியில் நேற்று நடைபெற்றது.

17வது ஆண்டு

சங்கத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் தஞ்சை ராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தின விழாவில் 98 பேர் இரத்ததானம் வழங்கினார்கள். 17வது ஆண்டாக நடைபெறும் இரத்ததான முகாமை அரிமா சங்க மாவட்டத்தலைவர் ஜி.வரதராஜன் தொடங்கி வைத்தார். எஸ்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.

இரத்ததானத்தை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் பெற்றுக்கொண்டது. நிகழ்ச்சியில் டாக்டர்.ராஜகுமார், டாக்டர் எஸ்.மகாலிங்கம், சி.பொன்னுசாமி, எஸ்.நந்தகுமார், கே.விஜயசங்கர், மதிமதன்ராஜ், ஏ.சி.எல்.சீனிவாசன், ஏ.சுப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கசெயலாளர் எஸ்.சரவணன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: